சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவின் (SPNI) புதிய தமிழ் பொது பொழுதுபோக்கு சேனலான ‘சோனி விழா’ (Sony VIZHA), வரும் அக்டோபர் 19-ந் தேதி இரவு 8 மணிக்கு தனது ஒளிபரப்பை பிரமாண்டமாக தொடங்குகிறது.
தமிழ்நாட்டின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நவீன வாழ்வியலைக் கொண்டாடும் வகையில் “இது நம்ம வைப்” என்ற தாரக மந்திரத்துடன் களமிறங்கும் இச்சேனலின் தொடக்க விழா நட்சத்திரங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.
தொடக்க விழாவின் சிவப்பு கம்பள நிகழ்வில் நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்று சிறப்பித்தனர். உலகப் புகழ்பெற்ற சமையல் போட்டியின் தமிழ் பதிப்பான ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ நிகழ்ச்சியில் சமந்தா ரூத் பிரபு முக்கியப் பங்காற்றுகிறார். அதேபோல், சர்வதேச அளவில் பிரபலமான ‘ஐடல்’ நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பான ‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இணைகிறார்.
தமிழ் ரசிகர்களுக்கு உலகத்தரத்திலான புதிய கதைகள், சர்வதேச தரத்திலான ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் புதுமையான பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்கும் நோக்கத்துடன் ‘சோனி விழா’ களமிறங்குகிறது.
Comments are closed.