தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு வேலம்மாள் நெக்ஸஸ் சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா

7

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 3 பதக்கங்கள் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் மற்றும் அவரது பயிற்சியாளர் திரு. நேஹ்பால் சிங் ஆகியோருக்கு வேலம்மாள் நெக்ஸஸ் சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடைபெற்றது.

வேலம்மாள் வித்யாலயா, ஆவடி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், வித்யா ராம்ராஜ், அவரது தாயார் மற்றும் பயிற்சியாளர் நேஹ்பால் சிங் ஆகியோருக்கு மாணவர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, மலர் மாலைகள் அணிவித்து பாரம்பரிய முறைப்படி கௌரவிக்கப்பட்டனர்.

வித்யா ராம்ராஜின் விடாமுயற்சி, கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் தொடர் பயிற்சியையும், அவரது வெற்றிக்குப் பின்னால் முக்கிய பங்காற்றிய பயிற்சியாளர் நேஹ்பால் சிங்கின் பங்களிப்பையும் பாராட்டும் வகையில், இருவருக்கும் தலா ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.

வேலம்மாள் நெக்ஸஸ் Correspondent திரு. M.V.M. வேல்மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வித்யா ராம்ராஜின் சாதனையும், நேஹ்பால் சிங்கின் அர்ப்பணிப்பும் பாராட்டப்பட்டன. அவர்களின் வெற்றி, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் உலக அளவில் சாதிக்க முடியும் என்பதற்கு இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் உதாரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கல்வியுடன் விளையாட்டுத் திறமைகளையும் ஊக்குவித்து வரும் வேலம்மாள் நெக்ஸஸ், மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வாய்ப்புகளை தொடர்ந்து வழங்கி வருவதுடன், சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளை கௌரவித்து அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

வித்யா ராம்ராஜ் மற்றும் நேஹ்பால் சிங் ஆகியோரின் சாதனைகளைப் போற்றிய இவ்விழா, மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தையும் கனவுகளையும் மேலும் வலுப்படுத்தும் பெருமைமிகு நிகழ்வாக அமைந்தது.

Comments are closed.