ஐமேக்ஸில் மீண்டும் ‘மண்டாடி’!

இன்று (அக். 9) முதல் பிரம்மாண்ட திரை அனுபவம்

5

சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கிய ‘மண்டாடி’ திரைப்படம், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இன்று முதல் (அக்டோபர் 9-ம் தேதி) முதல் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘மண்டாடி’, தமிழகத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமாகவும், உலக அளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாகவும் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 9-ம் தேதி) முதல் ஐமேக்ஸ் மற்றும் பிவிஆர் பலாஸோவின் பிரம்மாண்ட திரைகளில் படத்தை மீண்டும் ரசிகர்கள் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, ‘மண்டாடி’ திரைப்படம் அக்டோபர் 8-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் ஓடிடி மற்றும் ஐமேக்ஸ் என ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்திருக்கிறது.

Comments are closed.