நடிகர் வினுச்சக்கரவர்த்தி காலமானார்..!

217

Vinu-Chakravarthy-passed-away
பிரபல நடிகர் வினுசக்ரவர்த்தி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 74. சென்னையில் போலிஸ் சப் -இன்ஸ்பெக்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகல் அவர்களிடம் கதாசிரியர் மற்றும் உதவி இயக்குனராக பணி புரிந்தார். சிவகுமார் நடித்த ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படம் மூலம் திரைக்கதை எழுதி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்பு ‘வண்டி சக்கரம் ‘,’கோயில் புறா’,’இமைகள்’, ‘பொண்ணுக்கேத்த புருஷன்’ ஆகிய படங்களுக்கு கதை-திரைக்கதை, வசனம் எழுதி துணை இயக்குனராகவும் பணி புரிந்தார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், படுகா, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் 1003 படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படம் சீரடி சாய்பாபா.

எண்பதுகளில் கொடூரமான வில்லன் கதாபாத்திரம் என்றால் அதில் வினுச்சக்கரவர்த்தியை அடித்துக்கொள்ள ஆளில்லை.. அதன்பின் ரஜினியுடன் இணைந்து, அவரது ஆஸ்தான நடிகராக மாறி, பல படங்களில் நடித்த வினுச்சக்கரவர்த்தியின் நகைச்சுவை உருவமும் வெளியே தெரிய ஆரம்பித்தது.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடையவும், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தென்னிந்திய நடிகர் சங்கமும். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் தெரிவித்துக் கொண்டுள்ளன.

Comments are closed.