விதார்த்திற்கு ஒரு கட்டத்தில் படங்களே இல்லாமல் இடைவெளி விழுந்தது உண்மைதான். ஆனால் இன்று அதிகப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதும் விதார்த் தான். ‘உலா’, ‘பட்டைய கிளப்பு பாண்டியா’, ‘ஆள்’, ‘விழித்திரு’, ‘நாகேஷ்’, ‘காட்டுமல்லி’ மற்றும் அஜித்தின் தம்பியாக நடித்துள்ள ‘வீரம்’ உட்பட ஏழு படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பிஸியான ஒரே நடிகர் விதார்த் தான்.
இந்த ஏழு படங்களைத் தொடர்ந்து இப்போது எட்டாவதாக விதார்த் நடிக்கும் படம் ‘அருந்தபதி’. த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தை ஷாஜின் வர்கீஸ் என்ற மலையாள இயக்குனர் இயக்குகிறார். இவர் பிரபல மலையாள இயக்குனரான வினயனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர்.
இந்தப்படத்தில் ஹீரோயினாக கொல்கத்தாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா தத் என்பவர் அறிமுகமாகிறார். மேலும் தம்பி ராமையா, மனோபாலா, தேவதர்ஷினி ஆகியோரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப்படத்திற்கு ஜாஸி கிஃப்ட் இசையமைக்கிறார். இவர் பரத் நடித்த ‘4 ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் மூலம் ‘லஜ்ஜாவதியே’, ‘அன்னக்கிளி நீ வாடி’ பாடல்களால் தனது குரலாலும் இசையாலும் தமிழ் ரசிகர்களை ஏற்கனவே கிறங்கடித்தவர்தான்.
159998 421522extremely excellent put up, i certainly adore this internet web site, keep on it 79769