ஸ்டுடியோகிரீன் தயாரிப்பில் வெங்கட்பிரபு டைரக்ஷனில் கார்த்தி நடித்துள்ள ‘பிரியாணி’ படத்தின் கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. ரிலீஸுக்கு(டிச-20) இன்னும் பத்தே நாட்கள் உள்ள நிலையில் ‘பிரியாணி’ படத்தைப் பற்றிய புதுப்புது தகவல்கள் வெளிவந்துகொண்டு தான் இருக்கின்றன. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப்படத்தின் ஒலி அமைப்பு ‘டால்பி அட்மாஸ்’ என்னும் அதிநவீன தொழில்நுட்பத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு சிவாஜி 3டி, தலைவா, பீட்சா-2 வில்லா ஆகிய படங்கள் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ளன. ‘பிரியாணி’ இந்த தொழில்நுட்பத்தில் தமிழில் வெளியாகும் நான்காவது படம் என்றாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாவதால் ‘டால்பி அட்மாஸ்’ ஒலி அமைப்பில் தென்னிந்தியாவில் இரு மொழிகளில் வெளியாகும் முதல் படம் என்ற பெயரை ‘பிரியாணி’ தட்டிச்சென்றுள்ளது.
772053 181347This constantly amazes me exactly how blog owners for example yourself can uncover the time and also the commitment to maintain on composing fantastic weblog posts. Your web site isexcellent and one of my own ought to read blogs. I basically want to thank you. 966496