‘மதயானை கூட்டம்’ படத்தின் மூலமாக தயாரிப்பளராக மாறியிருக்கும் ஜி.வி.பிரகாஷ் கிட்டத்தட்ட படத்தின் 90 சதவீத வேலைகளை முடித்துவிட்டார். இந்தப்படத்தில் புதுமுகம் கதிர் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக ஓவியா நடிக்கிறார். படத்தை விக்ரம் சுகுமாரன் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் பாலுமகேந்திராவின் சீடர். அதுமட்டுமல்ல வெற்றிமாறன் இயக்கிய இரண்டு படங்களிலும் துணை இயக்குனராக வேலைபார்த்தவர்.
‘மதயானை கூட்டம்’ என்றதும் கும்கி மாதிரி யனையைப் பற்றிய படமோ என நினைத்துவிட வேண்டாம். தேனி மாவட்டத்தில் கிராமத்தில் உள்ள இரண்டு குடும்பங்களை பற்றியும், அவர்களுடைய பழக்க வழக்கங்கள், பண்பாடு, தெய்வ நம்பிக்கை இவற்றின் மீது பயணிக்கும் கதை தான்.
படத்தை ஜி.வி.பிரகாஷ் தயாரித்தாலும் படத்துக்கு இசையமைப்பவர் என்.ஆர்.ரகுநந்தன் தான். சமீபகாலமாக தரமான படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வரும் ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
650842 817629I just added this blog to my rss reader, excellent stuff. I like your writing style. 593847