செகண்ட் இன்னிங்ஸில் பிஸியான தமன்னா!

227

கடந்த இரண்டு வருடமாக தமன்னா நடித்த படம் எதுவும் தமிழில் ரிலீஸாகவில்லை என்பது உண்மைதான்.. உடனே, இனிமேல் தமன்னா அவ்வளவுதான்.. மார்க்கெட் காலி..அப்படி, இப்படியென்று செய்திகள் இறக்கைகட்டிக்கொண்டு உலாவ ஆரம்பித்துவிட்டன. ஆனால் தமன்னாவோ மீண்டும் துடிப்புடன் தனது அடுத்த இன்னிங்ஸை கவனமாக ஆரம்பித்திருக்கிறார்.

தற்போது தமிழில் அஜீத்துடன் ஜோடியாக ‘வீரம்’ படத்தில் நடித்து வருகிறார். இதுகூட ‘வீரம்’ பட இயக்குனர் சிவாவின் முதல் படமான ‘சிறுத்தை’யில் அவர் ஹீரோயினாக நடித்த நட்பினால் கிடைத்திருக்கலாம் என்று சொல்வீர்கள். ஆனால் இப்போது தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கவுள்ள ‘ஆகடு’ என்ற படத்தில் ஜோடியாக நடிக்கப்போவது..யெஸ், தமன்னாவேதான். இவர்கள் இருவரும் ஜோடிசேரும் முதல்படமும் இதுதான். ‘தூக்குடு’ வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபுவும் இயக்குனர் சீனு வைத்லாவும் இணையும் படமும் கூட.

இதுமட்டுமா.? இப்போது இந்தியிலும் கைவசம் இரண்டு படங்கள். அதில் ஒன்று தான் அக்ஷய்குமாருக்கு ஜோடியாக நடிக்கும் ‘இட்ஸ் எண்டெர்டெயின்மெண்ட்’. இந்தப்படத்தின் எண்பது சதவீத படப்பிடிப்பை பாங்காங்கில் நடத்தி முடித்திருக்கிறார்கள். அடுத்ததாக இந்தப்படத்திற்கான புரமோஷன் பாடல் ஒன்றில் அக்ஷய் குமாருடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார் தமன்னா. ஆகவே தனது இரண்டாவது இன்னிங்ஸ் மூலம் தமன்னா மீண்டும் வெற்றிகரமாக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

2 Comments
  1. order lsd Espoo, says

    499781 170150Read More HERE. I bookmarked it. 319973

  2. 616991 353314Pretty section of content. I just stumbled upon your site and in accession capital to assert that I get in fact enjoyed account your weblog posts. Any way Ill be subscribing to your feeds and even I achievement you access consistently quickly. 97626

Leave A Reply

Your email address will not be published.