செப்டம்பர்-13ல் மூடர்கூடம் ரிலீஸ்

214

இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக இருந்த நவீன் இயக்கியுள்ள மூடர்கூடம் படம் செப்டம்பர் 13ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. பசங்க புரொடக்‌ஷன் சார்பில் இயக்குனர் பாண்டிராஜே இந்தப்படத்தை தயாரித்துள்ளார். தங்களை எப்போதுமே உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ நினைத்துக்கொள்ளும் முட்டாள்களை பற்றிய கதைதான் இந்த மூடர்கூடம்.

நவீன், ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணா, ஆர்ஜே.ரமேஷ்திலக் என நிறைய நடிகர்கள் படத்தில் இருந்தாலும் இந்தப்படத்தில் ஹீரோ என்று யாரும் கிடையாது. ஏனெனில் படம் முழுக்க கதாநாயகி ஓவியாவை மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருக்கிறதாம். பின்னணி பாடகர் ஜேசுதாஸ், தான் அறிமுகமான பொம்மை படத்தில் பாடிய ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற பாடலை இந்தப்படத்தில் ரீமிக்ஸ் பாடலாக பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 Comment
  1. 796302 950639This is a very good subject to talk about. Sometimes I fav stuff like this on Redit. This article probably wont do effectively with that crowd. I will probably be positive to submit something else though. 64237

Leave A Reply

Your email address will not be published.