அரசியல் பற்றி புத்தகம் எழுதும் பவர்ஸ்டார்..!

307


தலைப்பை படித்ததுமே குழப்பம் வந்திருக்குமே.. பவர்ஸ்டாருக்கும் அரசியலுக்கும் என்னடா சம்பந்தம் என்று. ஆனால் இது தெலுங்கு சினிமாவின் ஒரிஜினல் பவர்ஸ்டாரான பவன் கல்யாண் பற்றிய செய்தி.. அவரது அண்ணனும் தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவி ஏற்கனவே அரசியலில் நுழைந்து இப்போது மத்திய அமைச்சராகவும் இருக்கிறார்.

அண்ணன் வழியில் தற்போது பவன் கல்யாணும் அரசியலில் ஈடுபட முடிவு செய்து இருக்கிறாராம். ஆனால் தனியாக கட்சி ஆரம்பித்து தானே தவிர யாருடனும் கூட்டாக இல்லையாம். இதற்கு முன்னோட்டமாக தற்போது அரசியல் பற்றி ஒரு புத்தகமும் எழுதியுள்ளாராம் பவர்ஸ்டார்.

இந்தப்புத்தகத்தில் அரசியல் குறித்த தனது கருத்துக்களையும் தற்போது அரசியலில் நடக்கும் கூத்துக்களையும் விலாவாரியாக குறிப்பிட்டுள்ளாராம். இந்தப்புத்தக வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது. மேலும் வரும் மார்ச்-14ஆம் தேதி தனது அரசியல் நுழைவுக்கான அறிவிப்பையும் பவண் கல்யாண் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

1 Comment
  1. 6029 126358Fantastic internet site you got here! Please maintain updating, I will def read a lot more. Itll be in my bookmarks so far better update! 983516

Leave A Reply

Your email address will not be published.