
‘சிங்கம்-2’ தந்த வெற்றியில் இருக்கும் ஹரி அடுத்ததாக விஷாலின் படத்தை இயக்குகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே 2007ல் இணைந்து ‘தாமிரபரணி’ என்ற சூப்பர்ஹிட் படத்தை தந்தவர்கள் தான். ஏழு வருடங்கள் கழித்து இருவரும் இணையும் இந்தப்படத்தை, விஷாலே தனது நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
தற்போது தனது சொந்த தயாரிப்பிலேயே ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் நடித்துவருகிறார் விஷால். இது முடிந்ததும், வரும் ஏப்ரலில் புதிய படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும்.. விஷால், ஹரியுடன் யுவன் சங்கர் ராஜாவும் நா.முத்துக்குமாரும் கைகோர்த்து களம் இறங்குகிறார்கள்.
இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். ‘3’ படத்துக்குபின் தமிழ்ப்படங்கள் எதிலும் நடிக்காமல் பாலிவுட்டிலும் டோலிவுட்டிலும் செட்டிலாகிவிட்ட ஸ்ருதிஹாசன், இந்த புதிய படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்ப இருக்கிறார்.
489768 567765Wow post thanks! We feel your articles are wonderful and want far more soon. We enjoy anything to do with word games/word play. 238747