சமுத்திரக்கனியின் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் படம் ‘தொண்டன்’. சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்க, இன்னொரு நாயகனாக விக்ராந்த் நடித்துள்ளார்.. சமுத்திரக்கனி ஜோடியாக சுனைனாவும், விக்ராந்த் ஜோடியாக அர்த்தனாவும் நடித்துள்ளனர்.. இவர்களுடன் சூரி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.. இந்த விழாவில் படம் குறித்து பேசிய சமுத்திரக்கனி, “தொண்டன் என பெயர் வைத்திருப்பதால் இது அரசியல் படமா என கேட்கிறார்கள்.. நிச்சயமாக இல்லை.. பக்கத்தில் இருக்கும் ஒருவருக்கு பிரச்சனை என்றால் அவருக்கு வலிய சென்று உதவி செய்கிறானே, அவன் தான் தொண்டன்.. அப்படி நம் சமூகத்தில் உள்ள மனிதாபிமானம் கொண்ட மனிதர்களை பற்றி பேசும் படம் தான் இந்த தொண்டன்” என கூறினார்..
இந்தப்படத்தை எடுக்கவேண்டும் என அவருக்குள் உந்துதலை ஏற்படுத்தியது எதுவென்றால், சில் வருடங்களுக்கு முன்பு கரூரில் ஒருதலை காதல் காரணமாக கல்லூரி வகுப்பறையிலேயே அத்தனை பேர் முன்னிலையில் அந்த வெறிபிடித்த ஒரு மிருகத்தால் தாக்கி கொல்லப்பட்ட மாணவி மரணமடைந்த சம்பவம் தானாம்.. அன்று அதை பயத்துடன் வேடிக்கை பார்த்த மாணவிகள் அவனை தாக்கி அந்த பெண்ணை காப்பாற்றி இருந்தால் என்கிற கேள்விக்கு விடையாகத்தான் இந்தப்படம் உருவாகி இருக்கிறதாம்..
இந்தப்படத்தில் ஆம்புலன்ஸ் ட்ரைவராக நடித்திருக்கும் சமுத்திரக்கனி ஆம்புலன் ட்ரைவர்களின் உன்னதமான பணியை பற்றியும் அழகாக சொல்லியிருக்கிறாராம்.. அவர் இதுவரை இயக்கியுள்ள 11 படங்களில் இதுதான் பெஸ்ட் என சொல்லும் விதமாக இந்தப்படம் இருக்கும் என்கிறார் சமுத்திரக்கனி நம்பிக்கையாக.