ராமநாராயணனின் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் ‘வீரம்’ படத்தின் சென்னை மற்றும் என்.எஸ்.சி ஏரியா உரிமையை மிகப்பெரிய தொகைக்கு விலைபேசி வாங்கி இருக்கிறது. தயாரிப்பாளர் தரப்பிலிருந்து டிசம்பர் இறுதிக்குள் முதல் காப்பியை தந்துவிடுமாறு படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். அப்படி வந்தால்தான் ஜனவரி முதல் வாரத்தில் படத்தை சென்சாருக்கு அனுப்பமுடியும் என்றும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.