ஜி.வி.பிரகாஷ் – கவுதம் மேனன் கூட்டணியில் ‘13’ ஹாரர் திரில்லர்!

ஜி.வி.பிரகாஷ் – கவுதம் மேனன் கூட்டணியில் ‘13’ ஹாரர் திரில்லர்!

ஜி.வி.பிரகாஷ் குமார், கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள ‘13’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விவேக் கே இயக்கியுள்ள இப்படம், ஹாரர், திரில்லர் மற்றும் புலனாய்வு அம்சங்களுடன் உருவாகியுள்ளது. அடர்ந்த காட்டின் பின்னணியில், ’13’ என்ற எண்ணைச் சுற்றியுள்ள மர்மங்களும், அமானுஷ்ய சக்திகளின் அச்சுறுத்தல்களும் கதையின் மையமாக இடம்பெற்றுள்ளன.

‘டார்லிங்‘ படத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து ஜி.வி.பிரகாஷ் மீண்டும் ஹாரர் கதைக்களத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் பவ்யா திரிக்கா, ஆதித்யா கதிர், ஐஸ்வர்யா, ஆத்யா பிரசாத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், வரும் டிசம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது.