ராமராக வாழ்ந்த அருண் கோவில்… இப்போது தசரதராக!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தில், மன்னர் தசரதராக அருண் கோவில் நடிக்கிறார். இதுதொடர்பான புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே தொலைக்காட்சி ‘ராமாயணம்’ தொடரில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த அருண் கோவில், தற்போது அதே காவியத்தில் ராமரின் தந்தையான தசரதராக நடிப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ளனர்.

இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5, 2026-ல் உலகம் முழுவதும் வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.