ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

ஃபேண்டஸி ஹாரர் காமெடி படமாக உருவாகி இருக்கும் படம் ’ஹவுஸ் மேட்ஸ்’. (HOUSE MATES) இதில், கதையின் நாயகனாக தர்ஷன் நடித்திருக்கிறார். இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார். இவர்களுடன் அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

டி.ராஜவேல் எழுதி இயக்கி இருக்கும் இப்படத்தை பிளேஸ்மித் ஸ்டுடியோஸ் (PLAYSMITH STUDIOS) நிறுவனம் சார்பில் எஸ்.விஜய பிரகாஷ் தயாரித்து உள்ளார், இவருடன் இணைந்து இயக்குனர் எஸ்.பிசக்திவேல் ( SOUTH STUDIOS ) படைப்பு தயாரிப்பாளராக களம் கண்டுள்ளார்.

தற்போது இத்திரைப்படத்தை பார்த்த முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் படக்குழுவை வாழ்த்தி, பாராட்டியுள்ளார். மேலும் இப்படத்தின் உலக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மூலம் உலகம் முழுவதும் விரைவில் வெளியிட உள்ளார்.

house matessivakarthikeyan reelase house matestamil movie house matesசிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ் மேட்ஸ்தமிழ்ப் படம் ஹவுஸ் மேட்ஸ்