ஆட்டுக்கு ‘ஷாருக்கான்’ என பெயர்வைத்த இயக்குனர்..!

நடிகர்களுக்கு ஆடிஷன் வைப்பதை பார்த்திருக்கிறோம். ஒரு ஆட்டுக்கு ஆடிஷன் வைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? ஒரு ஆட்டை தேர்ந்தெடுப்பதற்காக 400 ஆடுகளுக்கு ஆடிஷன் நடத்தியிருக்கிறார் இயக்குனர் ஜானகி விஸ்வநாதன். குழந்தை தொழிலாளர்களை மையப்படுத்தி இவர் இயக்கத்தில் 2001ல் வெளியான ‘குட்டி’ படத்திற்காக சிறந்த படத்திற்கான தேசிய விருது வாங்கியவர்.

தற்போது இவர் இந்தியில் ‘ஏக் ஹை பக்ராபூர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பொலிட்டிக்கல் சட்டையரான இந்தப்படத்தில் ஆடு ஒன்று மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இதற்காகத்தான் மேலே சொன்ன ஆடிஷன் நடத்தி அதில் சூப்பரான ஒரு ஆட்டை தேர்ந்தெடுத்திருக்கிறார். படத்தில் இந்த ஆட்டிற்கு ஷாருக்கான் என பெயர் வைத்து பரபரப்பை கூட்டியிருக்கிறார் ஜானகி. பப்ளிசிட்டிக்காகவா இந்தப்பெயரை வைத்தீர்கள் என கேட்டால் மறுக்கிறார்.

“ஆடுகள் விறபனை செய்யும் சந்தைக்குச் சென்று அங்கிருந்த வியாபாரிகளிடம் ஆட்டிற்கு பெயர் வைக்கும் பழக்கும் உண்டா..? எந்த மாதிரி பெயர்கள் வைப்பார்கள் என கேட்டபோது ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் ஆகிய பெயர்கள் தான் அதிகம் வைக்கப்படுவதாக கூறினார்கள். எப்படி ஒரு குழந்தைக்கு நமக்கு பிடித்த நடிகரின் பெயரை வைக்கிறோமோ அதேபோலத்தான் நமது செல்லப்பிராணிகளுக்கு பெயர் வைப்பதும்.. இதில் தவறு ஒன்றும் இல்லை” என விளக்கம் அளிக்கிறார் ஜானகி விஸ்வநாதன்.

Ek Hai BahrapurJanaki ViswanathanKuttySharukh Khanஅமீர்கான்ஏக் ஹை பக்ராபூர்குட்டிசல்மான்கான்ஜானகி விஸ்வநாதன்ஷாருக்கான்