ஷங்கரின் பள்ளியில் இருந்து ‘கப்பல்’ விடும் புதிய இயக்குனர்

தமிழ்சினிமாவை பொருத்தவரை இயக்குனர் ஷங்கரின் படங்கள் வெளியாகும்போது ஏற்படும் பரபரப்பிற்கு சற்று இணையாகவே அவரது உதவியாளர்கள் இயக்குனர்களாக மாறும்போதும் ஒரு பரபரப்பு ஏற்படும். பலர் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றவும் செய்திருக்கிறார்கள்.

அந்தவகையில் தற்போது ஷங்கரின் பாசறையில் பணிபுரிந்த கார்த்திக் என்பவர் ‘கப்பல்’ என்கிற படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் ஷங்கர் டைரக்‌ஷனில் ரஜினி நடித்த ‘சிவாஜி’, ‘எந்திரன்’ ஆகிய இரண்டு படங்களிலும் துணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஐ’ ஸ்டுடியோஸ்’ என்னும் புதிய நிறுவனம் இந்தப்பட்த்தை தயாரிக்கிறது.

Arul RajDirector ShankarEnthiranI StudiosKarthikKarthik G KrishNatarajan SankaranRaja Senthil KumarShankarSivajiSudan