ஃபாசிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

மலையாள மண்ணில் இருந்து தமிழுக்கு வந்த தேவதூதன். இவர் அங்கிருந்து கொண்டுவந்து இங்கு விதைத்தது அத்தனையும் முத்துக்கள் தான்.. ‘பூவே பூச்சூடவா’, ‘பூவிழி வாசலிலே’, ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ என இன்று டிவியில் பார்த்தாலும் ரிமோட்டிற்கு வேலை தராத அற்புத படைப்புகள். ‘வருஷம் 16’, ‘காதலுக்கு மரியாதை’ என அந்தந்த காலகட்டத்தில் அற்புத காவியங்களை தந்து இளம் ரசிகர்களின் மனதில் காதல் பூக்களை ஏராளமாக பூக்க வைத்த மகா கலைஞன்.

எப்போது படம் எடுத்தாலும் அதில் இரண்டு விஷயங்கள் இவருக்கு கட்டாயம் இருக்கவேண்டும்.. ஒன்று ஃப்லிம் ரோல்.. இன்னொன்று இளையராஜா. ஆம்.. இசைஞானியுடன் சேர்ந்து இவர் நடத்திய இசை ராஜாங்கத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா.?.

ஓர் இயக்குனராக ஒரு காலத்தில் இவர் ஆட்சி செய்த இடத்தில் இப்போது அவர் மகன் ஃபஹத் ஃபாசில் ஒரு முன்னணி நடிகராக ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். இன்று பிறந்தநாள் காணும் ஃபாசிலுக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது..

En Bommukutty AmmavukkuFaasilKadhulukku MariyathaiPoo Vizhi VaasalilaePoovae PoochadavaaVarusam 16
Comments (1)
Add Comment
  • continue

    10476 665820Thank her so considerably! This line is move before dovetail crazy, altarpiece rather act like habitual the economizing – what entrepreneur groovy night until deal with starting a trade. 322376