நியூயார்க் திரைப்பட விழாவில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’..!

275

oru-kidayin-karunai-manu 1

தரமான கதையம்சம் நிறைந்த திரைப்படங்கள் அனைத்துமே சர்வேதச திரைப்பட விழாக்களால் எளிதில் அடையாளம் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் ஈராஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் தேர்வாகி இருகிறது.. விதார்த் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தை ‘காக்கா முட்டை’ புகழ் மணிகண்டனின் உதவியாளரான சுரேஷ் சங்கையா இயக்கி இருக்கிறார்.

நியூயார்க் நகரத்தில் உள்ள ‘வில்லேஜ் திரையரங்கில்’ வருகின்ற மே 6 ஆம் தேதி அன்று இந்தப்படம் திரையிடப்படுகின்றது. இதன் மூலம், ரசிகர்கள் மத்தியிலும், வர்த்தக உலகினர் மத்தியிலும் இந்த திரைப்படம் நல்லதொரு மரியாதையை பெறும் என்பது உறுதி.. இதையடுத்து வரும் மே-19 ஆம் தேதி ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தை வெளியிட முடிவு செய்து இருக்கின்றார்களாம்.

Comments are closed.