பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர்-ஆனந்தி..!

225

anandhi-kathir
தயாரிப்பாளர் ஆவதற்கு இதுதான் சரியான நேரம் என நினைத்த இயக்குனர் பா.ரஞ்சித் தனது முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை தனது சீடரான மாரி செல்வராஜ் என்பவருக்கே கொடுத்து விட்டார். ரஞ்சித்திடம் மட்டுமல்ல, இயக்குனர் ராமிடமும் பணியாற்றியவர் தான் இந்த மாரி செல்வராஜ்.

திருநெல்வேலியை கதைக்களமாக கொண்டு காதல் கதையுடன் உருவாகும் இந்தப்படத்தில் கயல் ஆனந்தியும் கதிரும் காதல் ஜோடிகளாக நடிக்கிறார்கள். மேலும் இந்தப்படத்தில் கதையின் இயல்புத்தன்மை கெடாமல் இருப்பதற்காக அந்தப்பகுதி மக்களையும் நடிக்கவைக்க ஆட்கள் தேர்வு நடைபெறுகிறதாம். ஜனவரி இறுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Comments are closed.