
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்த ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என குரல் எழுப்பியவர் மீஞ்சுர் கோபி. ஆச்சர்யமான விஷயமாக அவர் இயக்கும் படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். படத்தில் அவருக்கு கலெக்டர் வேடம்.. சமீபத்தில் ஒரு முக்கியமான காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.
நாம் செய்தித்தாள்களில் அடிக்கடி படிப்போமே ஆழ்துளை குழாய்க்குள் குழந்தை சிக்கிக்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தது என்று.. அதுபோன்ற ஒரு காட்சியைத்தான் படமாக்கியுள்ளார்கள்.. அப்படி குழாயில் விழுந்து சிக்கிக்கொண்ட குழந்தை ஒன்றை மீட்கும் காட்சியில் கலெக்டரான நயன்தாரா முன்னின்று வேலையை துரிதப்படுத்துவதாக காட்சிகள் படமாக்கப்பட்டனவாம்.. ஆழ்துளை குழாய் பற்றிய விழிப்புணர்வு ஊட்டும் காட்சியாக இது படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.
Comments are closed.