தந்தையின் நினைவுநாளில் நடிகர்சங்க கட்டடத்திற்கு நிதி அளித்த ஐசரி கணேஷ்..!

234

Isari-Velan-29

கமல் நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் பூஜையை தொடர்ந்து அடுத்த நிகழ்வாக மறைந்த பழம்பெரும் நடிகர் ஐசரி வேலனின் 29வது நினைவுநாள் விழா நேற்று நடிகர் சங்க மைதானத்தில் நடைபெற்றது.. இதில் நலிந்த கலைஞர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. இந்த நாளில் நடிகர் சங்க கட்ட நிதிக்காக முதல் தொகையாக ரூ பத்து லட்சம் தொகையை நடிகர்சங்க நிர்வாகிகளான நாசர், விஷால், கார்த்தி ஆகியோரிடம் ஒப்படைத்தார்..

ஆரம்பத்தில் இருந்தே நடிகர்சங்கம் தொடர்பாக பல உதவிகளை செய்துவரும் ஐசரி கணேஷ், நடிகர்சங்க உறுப்பினர்களின் குழந்தைகளில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு படிப்புச்செலவை ஏற்றுக்கொண்டுள்ளார். அதுமட்டுமல்ல நடிகர்சங்கத்தில் அமையவுள வளாகத்தில் தனது பங்காக ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 350 பேர்களுக்கு மேல் அமரக்கூடிய மண்டபம் ஒன்றையும் கட்டித்தருவதாக கூறியுள்ள ஐசரி கணேஷ், அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது 10 லட்ச ரூபாயை அளித்துள்ளார்.

Comments are closed.