பிரபு – ஜெயராம் மகன் இணையும் ‘மீன் குழம்பும் மண்பானையும்’..!

386

kalidas - prabu

நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் தான் தமிழில் அறிமுகமாகும் தனது முதல் படமான ‘ஒரு பக்க கதை’ சம்பந்தமான வேலைகளை முடித்துவிட்டார். இதை தொடர்ந்து அவருக்கு இளையதிலகம் பிரபுவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இரண்டாவது படமாக கிடைத்துள்ளது. படத்திற்கு ‘மீன் குழம்பும் மண் வாசனையும்’ என வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார்கள்.

படத்தை அமுதேஷ்வர் என்பவர் இயக்க, ‘ஈஷான்’ என்னும் புதிய நிறுவனம் இந்தப்படத்தை தயாரிகிறது. டி.இமான் இசையமைக்கிறார். சிவாஜியின் பேரனும் ‘மச்சி’ படத்தில் ஹீரோவாக நடித்தவருமான துஷ்யந்த் இந்தப்படத்தின் தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

சமீபத்தில் மலேசியா சென்ற படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் அங்கே ‘கபாலி’ படப்பிடிப்பில் இருந்த ரஜினியிடம் இந்த விஷயத்தை சொல்லி ஆசிபெற்று வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நவ-20ல் சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பும் ஜனவரியில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பும் துவங்க உள்ளது.

Comments are closed.