விஷாலை ஆக்சன் ‘கதகளி’ ஆடவைக்கும் பாண்டிராஜ்..!

239


இதுவரை குழந்தைகள், குடும்பத்துக்கான படங்களை இயக்கிய பாண்டிராஜ், டக்கென விஷாலை வைத்து கமர்ஷியல் ஆக்சன் த்ரில்லர் படம் எடுப்பதை பார்க்கும்போது, “இப்படி வருவேன்னு எதிர்பார்க்கலே இல்ல” என்கிற சூர்யாவின் பஞ்ச்சுக்கு அப்படியே பொருந்துகிற மாதிரித்தான் இருக்கிறது. படத்திற்கு ‘கதகளி’ என டைட்டில் வைத்து இன்னும் கொஞ்சம் டெரர் ஏற்றியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

‘பசங்க-2’வை முடித்து ரிலீசுக்கு தயார்படுத்திவிட்ட பாண்டிராஜ், இப்போது ‘கதகளி’யில் தான் கவனம் செலுத்தி வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் ரசிகர்களை வசீகரித்த கேத்தரின் தெரசா நடிக்கிறார். ‘ஹிப் ஹாப்’ ஆதி இசையமைக்கும் இந்தப்படத்தை பாண்டிராஜூம் விஷாலும் இணைந்து தயாரிக்கின்றனர்.

Comments are closed.