
‘மாங்கா’ படத்தில் முதன்முதலில் கதாநாயகனாக, அதுவும் ஒன்றல்ல இரண்டு வேடங்களில் நடிக்கிறார் பிரேம்ஜி. அவரது அண்ணன் வெங்கட் பிரபுவே எடுக்காத இந்த ரிஸ்க்கை எடுப்பவர் இயக்குனர் ஆர்.எஸ்.ராஜா. இவர் சக்தி சிதம்பரத்தின் சிஷ்யர். விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடிக்கும் அதிசயங்கள் பல.. ஆனால் அப்படி அவர் கண்டுபிடிக்கும் பல விஷயங்கள், பலரது பார்வையில் விநோதமாக தெரிகிறது. இதைவைத்து காமெடியாக கதை பின்னியிருக்கிறார் இயக்குனர் ராஜா.
கதாநாயகியாக அத்வைதா நடிக்கிறார்.. படத்தின் இசையும் பிரேம்ஜி தான். பாடல்களை கங்கைஅமரன், சினேகன் ஆகியோர் எழுதிருக்கிறார்கள். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை காமராஜர் அரங்கத்தில் வைத்து பல வி.ஐ.பிக்களை வரவழைத்து பிரமாண்டமாக நடத்தினார் படத்தின் தயாரிப்பாளரான சக்திவேல். பின்னே பெருந்துறையில் மிகப்பெரிய பஸ்கம்பெனி ஓனர் என்றால் சும்மாவா..?
இந்த விழாவில் பேசிய ‘சிங்கம்புலி’ படத்தின் இயக்குனர் சாய்ரமணி, “படத்தின் இயக்குனர் ராஜா எனது நீண்ட கால நண்பன். அந்த வகையில் இந்த மாங்கா படத்தின் கதை எனக்கு தெரியும். இந்தப்படம் வெளியாகும் நாட்களில் பெரிய படங்கள் எதுவும் வெளியிடவேண்டாம்.. அதுதான் அவர்களுக்கு நல்லது. அந்த அளவுக்கு இந்தபடம் சூப்பர்ஹிட் வெற்றியை அடையப்போகிறது” என்று உச்சகட்ட நம்பிக்கையை தெரிவித்தார்.. அட.. இப்படியெல்லாம் கூட பேசுவார்களா..?
Comments are closed.