“நான் விஸ்கி.. தனுஷ் தண்ணி..” அமிதாப் உடைத்த ரகசியம்..!

249

 

நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்த, தனுஷின் இரண்டாவது இந்திப்படமான ‘ஷமிதாப்’பின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. பால்கி இயக்கியுள்ள இந்தப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்புடன் இணைந்து நடித்துள்ளார் தனுஷ். கதாநாயகியாக கமலின் இளைய மகள் அக்ஷரா அறிமுகமாகிறார். இளையராஜா இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப்படத்தின் ட்ரெய்லரில் இருந்து இதுதான் கதை என அறிந்துகொள்ள முடியாவிட்டாலும் அதில் சின்ன சின்ன க்ளூக்களை தந்துள்ளார் இயக்குனர் பால்கி. அதாவது ட்ரெய்லரில் அமிதாப், “நான் விஸ்கி.. அவன் தண்ணி.. விஸ்கி இல்லாம வெறும் தண்ணிக்கு மதிப்பு இல்ல… ஆனா தண்ணி இல்லைனாலும் விஸ்கிக்கு மதிப்புதான்” என்று பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது.

இது படத்தின் கதைக்குள் அமிதாப்புக்கும் தனுஷிற்குமான ஈகோ மோதலை காட்டுகிறது. படத்தின் கதைப்படி சினிமாவில் கதாநாயகனாக நடிக்கும் தனுஷுக்கு டப்பிங் ஆர்டிஸ்டான அமிதாப் குரல் கொடுக்கிறார் என்றும் அதனாலேயே தனுஷின் ஹீரோ வேல்யூ உயர்கிறது என்றும் இதில் யார் பெரியவர் என்கிற ஈகோ மோதலை காட்டுவதாக இந்த வசனம் அமைந்துள்ளது என்கிறார்கள்.

மேலும் தனுஷ் ‘SHamithabh’ என ஒரு துண்டுச்சீட்டில் எழுதிக்கட்டுகிறார்.. ஆனால் அமிதாப்போ SH’ ஐ சுருக்கி ‘shAMITHABH’ என எழுதிக்காட்டுகிறார். அதாவது ஒருவர் பெயரை மற்றவர் சிறிய எழுத்துக்களில் எழுதிக்காட்டுவதன் மூலம் இருவருக்கும் இடையேயான ஈகோ மோதலை சொல்லியிருக்கிறார் இயக்குனர் பால்கி என்றும் விஷயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

 

Comments are closed.