
‘கோச்சடையான்’ படத்திற்கு பலமுறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு அது ஒவ்வொன்றாக தள்ளிப்போன கதை நமக்கு தெரியும். ஆனால் இந்தமுறை சூப்பர் ஸ்டார் நடித்து வரும் லிங்கா’ எந்த ஒரு தாமதமும் இன்றி ரஜினி பிறந்தநாளில் ரிலீஸ் ஆகவிருக்கிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்தமுறை சரியான தேதியில் ரிலீசாகும் என அடித்து சொல்லலாம். காரணம் படத்தை இயக்குவது திட்டமிடலுக்கு பெயர்போன கே.எஸ்.ரவிகுமார் அல்லவா? அதேபோல ரஜினி படம் தயாராகும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் ரஜினியின் பிறந்த நாளன்று அவர் படம் ரிலீசாகும் என்கிற யூகங்கள் கிளம்புவதுண்டு.
ஆனால் கடந்த 25 வருடங்களில் ஏன் அதற்கு முன்னர் கூட ரஜினி பிறந்தநாளில் அவரது படம் ரிலீசானதாக வரலாறு இல்லை. அந்த வகையில் ‘லிங்கா’ அந்த சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கலாம்.
Comments are closed.