
பாபாவில் நடிக்க வாய்ப்பு வந்தபோது கருணாஸுக்கும் குசேலன், எந்திரன் படங்களில் நடிக்க அழைப்பு வந்தபோது சந்தானத்துக்கும் என்னமாதிரியான பரவச உணர்வு ஏற்பட்டிருக்குமோ அப்படி ஒரு உணர்வில் தான் இருக்கிறார் நகைச்சுவை நடிகாரான ‘சூதுகவ்வும்’ மற்ரும் ‘யாமிருக்க பயமே’ புகழ் கருணாகரண்.
காரணம் சூப்பர்ஸ்டாருடன் ‘லிங்கா’வில் நடிக்கும் ஜாக்பாட் அடித்துள்ளது கருணாகரனுக்கு. சமீபத்தில் கருணாவை அழைத்த இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ‘லிங்கா’ படத்தில் நடிக்க தேதிகள் இருக்குமா என கேட்க, சூப்பர்ஸ்டார் படத்தில் நடிக்க, இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா என, அவர் கேட்ட தேதிகளை அள்ளிக்கொடுத்திருக்கிறார் கருணா. ஏற்கனவே இந்தப்படத்தில் ரஜினியுடன் சந்தானமும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.