ஒரே நேரத்தில் ரஜினி மற்றும் சந்தானம் படங்களில் யோகிபாபு

262

தற்போதைய சூழலில் யோகிபாபு மட்டும் தான் பிஸியான நகைச்சுவை நடிகராக நடித்து கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களாக மும்பையில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் தர்பார் படத்தில் இணைந்து நடித்து வருகிறார் யோகிபாபு. குறுகிய காலத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறார் யோகிபாபு.

மேலும் மும்பையில் சந்தானம் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்திலும் யோகிபாபு காமெடியனாக நடித்து வருகிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்பு மும்பையில் அருகருகில் நடைபெறுவதால் யோகிபாபு இரண்டு படங்களிலும் மாறி மாறி நடித்து வருகிறார்.

Comments are closed.