பாண்டிராஜ் படத்திலும் கார்த்தி ஜோடியாக சாயிஷா..!

240

sayesha
வனமகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாயிஷா சைகல்.. தற்போது விஜய்சேதுபதி நடித்துவரும் ஜூங்கா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சாயிஷா. அடுத்தததாக பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கும் படத்திலும் சாயிஷா கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம்.

ஏற்கனவே கார்த்தி-விஷால் இணைந்து நடிக்க, பிரபுதேவா டைரக்சனில் உருவாக இருக்கும் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’ படத்திலும் கதாநாயகியாக சாயிஷா தான் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சாயிஷா தவிர இன்னும் இரண்டு கதாநாயகிகளும் இந்தப்படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Comments are closed.