“மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்” ; கனிதனை பாராட்டிய விஜய்..!


கலைப்புலி தாணு தயாரிப்பில் ‘கணிதன்’ படத்தை இயக்கியுள்ள டி.என்.சந்தோஷின் முக்கியமான நலம் விரும்பிகளில் ஒருவர்தான் விஜய். துப்பாக்கியில் ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக பணிபுரிந்தபோது ஆரம்பித்த நட்பு, தற்போது சந்தோஷ் இயக்கியுள்ள ‘கணிதன்’ படத்தை பார்த்துவிட்டு விஜய் பாராட்டும் அளவுக்கு வளர்ந்துள்ளது. படத்தை பார்த்த விஜய், “ஒரு மாஸ் ஹீரோவுக்கான சப்ஜெக்ட் இது.. அதர்வாவையும் அதற்கேற்ற மாதிரி மாற்றியிருக்கிறீர்கள்” என பாராட்டியுள்ளாராம்.

அடுத்து விஜய்யை வைத்து படம் இயக்கும் எண்ணம் இருக்கிறதா என்று கேட்டால், “தாணு சார் கூட என்னிடம் நீ விஜய்யை வைத்து படம் இயக்கவேண்டும் என்று சொன்னார்.. ஆனால் விஜய் சாரை சந்தித்து கதை சொல்வதற்கு முன் என்னிடம் ஏற்கனவே ஹிட் படம் கொடுத்தவன் என்கிற விசிட்டிங் கார்டு இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.. கணிதன் அதை எனக்கு தரும் என நம்புகிறேன்” என்று கூறுகிறாராம் டி.என்.சந்தோஷ்.

A R murugadossAdharvaCatherine TeresaKalaipuli S DhanuKanithanT N SanthoshVijay